மாணவிக்கு ரோஜா கொடுத்து காதலிக்க வற்புறுத்திய ஆசிரியர் கைது

மாணவிக்கு ரோஜா கொடுத்து காதலிக்க வற்புறுத்திய ஆசிரியர் கைது
மாணவிக்கு ரோஜா கொடுத்து காதலிக்க வற்புறுத்திய ஆசிரியர் கைது

எட்டாம் வகுப்பு மாணவிக்கு காதலர் தினத்தன்று ரோஜா கொடுத்து காதலிக்க வற்புறுத்திய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். அதற்கு உடந்தையாக இருந்த மற்ற இரண்டு ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தை அடுத்துள்ள மேல்நாரியப்பனூரில் உள்ள புனித அந்தோணியர் மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவியிடம், ஆசிரியர் நிர்மல், ரோஜாவைக் கொடுத்து காதலை வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த ஆசிரியருக்கு ஆதரவாக இரண்டு ஆசிரியர்கள் மாணவியை காதலிக்குமாறு கட்டாயப்படுத்தியதோடு, மிரட்டியதாகவும் தெரிகிறது.

இதையடுத்து அந்த மாணவி பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பள்ளிக்குச் சென்று ரோஜா கொடுத்த ஆசிரியரைத் தாக்கியிருக்கின்றனர். அதையடுத்து காவல்துறையிடம் பெற்றோர் புகார் அளித்த நிலையில், ஆசிரியர் நிர்மல் மற்றும் இரண்டு ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com