\
கோவை பாலியல் சம்பவம் - அறிக்கை தர தமிழக கல்வித்துறை உத்தரவு

கோவை பாலியல் சம்பவம் - அறிக்கை தர தமிழக கல்வித்துறை உத்தரவு

கோவை பாலியல் சம்பவம் - அறிக்கை தர தமிழக கல்வித்துறை உத்தரவு
Published on

கோவை பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க கோவை முதன்மை கல்வி அலுவலருக்கு தமிழக கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோவையில் பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்துகொண்ட புகாரில் ஆசிரியர் மற்றும் பள்ளி முதல்வர் ஆகியோர் போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தலை தடுக்க அனைத்துப் பள்ளிகளிலும் விசாரணை கமிட்டி அமைக்கவேண்டும் என்றும், இதற்கான உதவி எண்ணும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புகார் தெரிவிக்கும் மாணவிகளின் சுயவிவரம் பாதுகாக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில் கோவை போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாத வகையில் தடுப்பது தொடர்பாக வருகிற 23ஆம் தேதி முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. மேலும், கோவை பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க கோவை முதன்மை கல்வி அலுவலருக்கு தமிழக கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com