தமிழிசை
தமிழிசைPT

”இது போன்று நடப்பவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்குவோம்" - புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை!

சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரம் தற்பொழுது புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முக்கியகாரணமாக கூறுவது புதுச்சேரியில் போதை பழக்கம் அதிகரித்திருப்பதால் இத்தகைய குற்றங்கள் அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது.
Published on

புதுச்சேரி சோலை நகர் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி, கடந்த சனிக்கிழமை காணாமல் போனார். இது தொடர்பாக முத்தியால்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஐந்து தனிப்படைகள் அமைத்து தேடிவந்தனர்.

இந்நிலையில், 72 மணி நேரத்திற்குப் பிறகு அம்பேத்கர்நகர் வாய்க்காலில் துணியால் சுற்றப்பட்ட மூட்டையில் காணாமல் போன சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சிறுமியை கொலை செய்தவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலிசார் இருவரை கைது செய்த நிலையில் சிலரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரம் தற்பொழுது புதுச்சேரியில் பூதாகாரமாக வெடித்துள்ளது. இதற்கு முக்கியகாரணமாக கூறுவது புதுச்சேரியில் போதை பழக்கம் அதிகரித்திருப்பதால் இத்தகைய குற்றங்கள் அதிகரிப்பதாக சொல்லப்படுகிறது.

இது குறித்து புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சொல்லவது, ”இது போன்று நடப்பவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்குவோம். குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். மக்களின் போராட்டம் நியாயமானதுதான். ” என்று கூறியிருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com