\
வேலைக்கு வந்த முதல்நாளே வடமாநில பெண்ணுக்கு பாலியல் தொல்லை - சூப்பர்வைசர் கைது

வேலைக்கு வந்த முதல்நாளே வடமாநில பெண்ணுக்கு பாலியல் தொல்லை - சூப்பர்வைசர் கைது

வேலைக்கு வந்த முதல்நாளே வடமாநில பெண்ணுக்கு பாலியல் தொல்லை - சூப்பர்வைசர் கைது
Published on

ஸ்ரீபெரும்புதூரில் வட மாநில பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சூப்பர்வைசர் கைது செய்யப்பட்டார்.

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் பூனம்குமாரி (20). நேற்று ஜார்கண்டில் இருந்து ஸ்ரீபெரும்புதூரக்கு வந்த இவர், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள போந்தூர் கிராமத்தில் தங்கியுள்ளார். இந்நிலையில், ஹவுஸ் கீப்பிங் வேலைக்காக ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு இருசக்கர வாகனத்தில் தனது ஊர்க்காரரான வினைகுமார் மற்றும் சேலத்தைச் சேர்ந்த சூப்பர்வைசர் தமிழரசன் (23) ஆகியோருடன் பூனம்குமாரி ஒரகடம் நோக்கிச் சென்றுள்ளார்.

அப்போது, இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த சூப்பர்வைசர் தமிழரசன், பூனம்குமாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து பயந்து போன பூனம்குமாரி கத்தி கூச்சலிட்டு இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் பூனம்குமாரியின் இரண்டு கைகளிலும் சிராய்ப்பு காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சூப்பர்வைசர் தமிழரசனை பிடித்து ஸ்ரீபெரும்புதூர் காவல் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர், சூப்பர்வைசர் தமிழரசன் மற்றும் பூனம்குமாரியிடம்; குறித்து விசாரணை மேற்கொண்டு வழக்குப் பதிவு செய்து தமிழரசனை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com