குற்றம்
சுகேஷ் சந்திரசேகரின் தோழி நடிகை லீனாமரியா கைது: பணமோசடி புகாரில் டெல்லி போலீஸ் நடவடிக்கை
சுகேஷ் சந்திரசேகரின் தோழி நடிகை லீனாமரியா கைது: பணமோசடி புகாரில் டெல்லி போலீஸ் நடவடிக்கை
பல்வேறு மோசடி வழக்குகளில் தொடர்புடைய தரகர் சுகேஷ் சந்திரசேகரின் தோழி நடிகை லீனா மரியாவை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர்.
மருந்து நிறுவனமான ரான்பாக்ஸியின் முன்னாள் தலைவர் ஷிவந்தர் சிங்கின் மனைவியை ஏமாற்றி மோசடி செய்த புகாரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் வாங்கித் தருவதாகக் கூறி, தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதானவர் சுகேஷ் சந்திரசேகர். இவர் டெல்லியில் தொழிலதிபர்களிடம் பல ஓப்பந்தங்களை முடித்து தருவதாக 200 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அவரது தோழி லீனா மரியாவை டெல்லியில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.