\
கிரிக்கெட் மட்டை தாக்கியதில் கோமா நிலையிலிருந்த மாணவர் உயிரிழப்பு

கிரிக்கெட் மட்டை தாக்கியதில் கோமா நிலையிலிருந்த மாணவர் உயிரிழப்பு

கிரிக்கெட் மட்டை தாக்கியதில் கோமா நிலையிலிருந்த மாணவர் உயிரிழப்பு
Published on

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே நழுவிச் சென்ற கிரிக்கெட் மட்டை தாக்கியதில் காயமடைந்த மாணவன் விஸ்வேஷ்வரன் உயிரிழந்தான்.

சித்தபூண்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவன் விஷ்வேஸ்வரன் விட்டாம்பாளையம் ஆதிதிராவிடர் நலவிடுதியில் தங்கி 7-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த திங்கட்கிழமை அன்று மாணவன் விஷ்வேஸ்வரன் நண்பர்கள் மற்றும் ஆசிரியர் குப்புசாமியுடன் கிரிக்கெட் விளையாடியுள்ளான். அப்போது, எதிர்பாராத விதமாக ஆசிரியர் குப்புசாமி கையிலிருந்த கிரிக்கெட் மட்டை நழுவிச் சென்று விஷ்வேஸ்வரனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்து கோமா நிலைக்கு சென்ற மாணவன், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். இந்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் விஸ்வேஷ்வரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

இது குறித்து உயிரிழந்த மாணவனின் பெற்றோர் கூறுகையில், “மகன் பொறியாளன் ஆக வேண்டும் என்ற ஆசையில் தான் படித்து வந்தான். இந்த சம்பவத்தை விபத்தாக பதிவு செய்யாமல், கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com