குற்றம்
மாணவிக்கு பாலியல் தொல்லை: அரசுப்பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது
மாணவிக்கு பாலியல் தொல்லை: அரசுப்பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது
செய்யாறு அருகே பள்ளி மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ஆசிரியரை அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வெம்பாக்கம் தாலுகா சட்டுவந்தாங்கல் அரசு தொடக்கப் பள்ளியில் பணியாற்றி வருபவர் ராமலிங்கம் (57). இவர். இதே பள்ளியில் நான்காம் வகுப்பு பயிலும் மாணவியிடம் கடந்த சில நாட்களாக தகாத முறையில் வற்புறுத்தி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார் இதையடுத்து மாணவியின் பெற்றோர் செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் நந்தினி தேவி பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ சட்டத்தின்கீழ் ஆசிரியர் ராமலிங்கத்தை கைது செய்தனர்.