’உங்களுக்கு பணம் எடுத்து தரவா?’.. ஏடிஎம் வருபவர்களிடம் நூதன திருட்டில் ஈடுபட்டவர் கைது

’உங்களுக்கு பணம் எடுத்து தரவா?’.. ஏடிஎம் வருபவர்களிடம் நூதன திருட்டில் ஈடுபட்டவர் கைது
’உங்களுக்கு பணம் எடுத்து தரவா?’.. ஏடிஎம் வருபவர்களிடம் நூதன திருட்டில் ஈடுபட்டவர் கைது

ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுக்க வரும் நபர்களை நூதன முறையில் ஏமாற்றி தொடர்ந்து பணத்தை திருடி வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது நடவடிக்கையில் 19 வகையான வங்கிகளின் 140 ஏடிஎம் கார்டுகள் மற்றும் 35 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வேலூர் தெற்கு காவல் துறையின் குற்றப்பிரிவு காவலர்கள் வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள EB அலுவலகம் எதிரே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் காவலர்களை பார்த்ததும் வண்டியை நிறுத்திவிட்டு எதையோ தூக்கி எறிந்துள்ளார். சந்தேகம் அடைந்த காவலர்கள் அவரை பிடித்து விசாரித்த போது அவர் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும், அவர் வீசியது ஏடிஎம் கார்டுகள் என்றும் தெரியவந்தது.

இந்த விவகாரம் குறித்து காவலர்கள் கூறுகையில், கைதான நபர் வடுங்கன்தாங்கள் பில்லாந்திப்பட்டு பகுதியை சேர்ந்த கூலி தொழில் செய்யும் சுரேஷ்(36) என்றும். இவர் ஏடிஎம் மையத்துக்கு பணம் எடுக்க வரும் நபர்களை (எடுக்க தெரியாத நபர்களை) ஏமாற்றி போலியான மற்றும் காலாவதியான ஏடிஎம் கார்டை கொடுத்துவிட்டு நூதன முறையில் அவர்களை ஏமாற்றி அவர்களின் கார்டு மூலம் பணத்தை தொடர்ந்து திருடி வந்துள்ளதாகவும், சித்தூர் பகுதியில் அதிக அளவில் இது போன்ற திருட்டில் ஈடுபட்டதாகவும் மற்றும் வேலூர், காட்பாடி, பாகயம், கே.வி.குப்பம் போன்ற பகுதிகளிலும் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறினர்.

இதனையடுத்து கைதான சுரேஷிடம் இருந்து 19 வகையான வங்கிகளின் 140 ஏடிஎம் கார்டுகள், 35 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

விசாரணைக்கு பின் வேலூர் ஜெஎம் 1 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மோசடி குற்றவாளி சுரேஷ், 15 நாள் நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com