காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் குழந்தையை திருடிய தம்பதி - வளாகத்திலேயே மடக்கிய ஊழியர்கள்

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் குழந்தையை திருடிய தம்பதி - வளாகத்திலேயே மடக்கிய ஊழியர்கள்
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் குழந்தையை திருடிய தம்பதி - வளாகத்திலேயே மடக்கிய ஊழியர்கள்

பிறந்த மூன்று நாட்களேயான குழந்தையை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையிலிருந்து திருடிச் சென்ற தம்பதியினரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். 

ராணிப்பேட்டை மாவட்டம் மேல் பலந்தை கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் பிரபாகரன் - சுஜாதா. இவர்களுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை மகப்பேறுப் பிரிவில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் மகப்பேறு வளாகத்திற்குள் சென்ற ராமு - சத்யா என்ற தம்பதியினர் பிறந்து 3 நாட்களே ஆன ஆண் குழந்தையை அங்கிருந்து திருடிக்கொண்டு மருத்துவமனை வளாகத்தைவிட்டு வெளியேற முயன்றிருக்கின்றனர். 

அதற்குள் குழந்தையை காணவில்லை என பதறித் துடித்த பெற்றோர் சத்தம் போட்டுள்ளனர். குழந்தையைத் திருடிய தம்பதியினர் மருத்துவமனை வளாகத்தை விட்டு பேருந்து நிலையத்திற்கு செல்ல முற்படும்போதே, சந்தேகமடைந்த மருத்துவமனை ஊழியர்கள் அவர்களை மடக்கிப் பிடித்து விசாரித்ததில் குழந்தையைத் திருடி வந்தது தெரியவந்துள்ளது. உடனடியாக விஷ்ணுகாந்தி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் காவல்துறையினர் குழந்தையை திருடிச்சென்ற தம்பதியினரை விசாரணைக்காக அழைத்து வந்தனர்.

விசாரணையில் சத்யா அரசு மருத்துவமனைக்கு முன்பே வந்துவிட்டதாகவும், ராமு சத்யாவைத் தேடி அரசு மருத்துவமனைக்கு வரும்போது சத்யா கையில் ஆண் குழந்தை ஒன்றை வைத்து இருப்பதை பார்த்ததாகவும் கூறியுள்ளார். சத்யாவுடன் காவல்துறை விசாரணை மேற்கொண்டதில் மகப்பேறு வளாகத்தில் வயதான மூதாட்டி ஒருவர் இந்த ஆண் குழந்தையை தன்னிடம் கொடுத்ததாகவும் குழந்தையை வாங்கிக்கொண்டு உடனடியாக மருத்துவமனை வளாகத்தைவிட்டு சென்றுவிட வேண்டும் என அந்த மூதாட்டி கூறியதாகவும் கூறியிருக்கிறா.ர் இனி அடுத்தகட்ட விசாரணையில்தான் முழு விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்திருக்கின்றனர். அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவில் உரிய கண்காணிப்பு இல்லாததே குழந்தையை எளிதாக திருடிச்சென்றதற்கு காரணம் என அங்கு சிகிச்சை பெறுவோர் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com