புதுச்சேரி: குடும்பத் தகராறு; ஆயுதப்படை காவலருக்கு கத்திக்குத்து

புதுச்சேரி: குடும்பத் தகராறு; ஆயுதப்படை காவலருக்கு கத்திக்குத்து

புதுச்சேரி: குடும்பத் தகராறு; ஆயுதப்படை காவலருக்கு கத்திக்குத்து
Published on

புதுச்சேரியில் குடும்பத்தகராறு காரணமாக ஏற்பட்ட மோதலில் ஆயுதப்படை காவலருக்கு கத்திக்குத்து விழுந்தது. அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். 

புதுச்சேரி அடுத்த அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி இந்துமதி. கணவன்-மனைவி பிரச்னை காரணமாக இந்துமதி ஓடைவெளியில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். இதையடுத்து தனது மனைவியை பார்க்க பிரகாஷ் ஓடைவெளிக்கு வந்துள்ளார். அப்போது ஆயுதப்படை காவலரும், இந்துமதியின் சகோதரருமான சிவஞானம் பிரகாஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதில் ஆத்திரமடைந்த பிரகாஷ் சிவஞானத்தை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதனால் படுகாயமடைந்த சிவஞானத்தை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com