வேதாரண்யம் நடுக்கடலில் தமிழக மீனவர்களை தாக்கிய பொருட்களை பறித்த இலங்கை மீனவர்கள்

வேதாரண்யம் நடுக்கடலில் தமிழக மீனவர்களை தாக்கிய பொருட்களை பறித்த இலங்கை மீனவர்கள்
வேதாரண்யம் நடுக்கடலில் தமிழக மீனவர்களை தாக்கிய பொருட்களை பறித்த இலங்கை மீனவர்கள்

வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் சரமாரியான தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் காயமடைந்த மூன்று மீனவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர். அப்போது அவர்களிடமிருந்து, ரூ. 3 லட்சம் மதிப்புள்ள மீன்பிடி வலைகள் ஜிபிஎஸ் உள்ளிட்ட பொருட்களை பறித்துக்கொண்டு அவர்களை இலங்கை மீனவர்கள் விரட்டியடித்தியுள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறை மீனவர் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி அவருடைய மகன்கள் சிவா, சிவக்குமார் ஆகிய 3 பேர் நேற்று மதியம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். நள்ளிரவு 10 மணியளவில், சுமார் 15 கடல் மைல் தொலைவை கடந்து வேதாரண்யம் நடுக்கடலில் வலைவிரித்து மீன்பிடித்துள்ளார்கள். அப்போது அங்கு அதிவேக என்ஜின் பொருத்தப்பட்ட மூன்று படகுகளில் வந்த இலங்கை மீனவர்கள், ஆறுகாட்டுத்துறை மீனவர்களின் படகை சூழ்ந்து கொண்டு, அவர்களிடமிருந்த பொருட்களை சேதப்படுத்த தொடங்கியுள்ளனர்.

மீன்பிடி வலையை இலங்கை மீனவர்கள் சேதப்படுத்த தொடங்கியபோது, அதை தடுக்க நாகை மீனவர் சிவக்குமார் முயன்றுள்ளார். அதற்காக அவரை அரிவாளால் வெட்டியுள்ளார்கள் இலங்கை மீனவர்கள். இதனால் தலையில் பலத்த காயமடைந்துள்ளார் அவர். மற்ற இரண்டு மீனவர்களை கம்பு கட்டை போன்றவற்றால் தாக்கி, ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 400 கிலோ வலைகளை வெட்டி பறித்து கொண்டு, ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட பொருட்களை பறித்துக் கொண்டு மீனவர்களை விரட்டியடித்துள்ளனர். இதில் அச்சமடைந்த மீனவர்கள் அவசர அவசரமாக அதிகாலையில் கரை திரும்பினர்.

அரிவாளால் வெட்டியதில் காயமடைந்த மீனவர் சிவக்குமார் உள்ளிட்ட 3 மீனவர்கள் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து வேதாரணியம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகையில் கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை தாக்கி, அவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடி வலைகளை இலங்கை மீனவர்கள் பறித்துச் செல்வது தொடர்கதையாக உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும், இந்திய எல்லையில் கடலோர காவல்படையினர் கப்பலில் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என்பதுமே மீனவர்கள் கோரிக்கையாக உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com