\
நீலகிரி: பெண் காவலர் அளித்த பாலியல் புகார் - சிறப்பு உதவி ஆய்வாளர் கைது

நீலகிரி: பெண் காவலர் அளித்த பாலியல் புகார் - சிறப்பு உதவி ஆய்வாளர் கைது

நீலகிரி: பெண் காவலர் அளித்த பாலியல் புகார் - சிறப்பு உதவி ஆய்வாளர் கைது
Published on

குன்னூர் அருகே மஞ்சூர் பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணன் என்பவர், தன்னை திருமணம் செய்து கொள்வதாக பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றிவிட்டதாக பெண் காவலர் கொடுத்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மஞ்சூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் சரவணன். இவர், குன்னூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலருடன் பல மாதங்களாக திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்துள்ளார். மேலும் திருமணம் செய்து கொள்வதாக பெண் காவலரிடம் உறுதி அளித்துள்ளார்.

இந்நிலையில் பலமுறை திருமணம் செய்து கொள்ளுமாறு பெண் காவலர் வலியுறுத்தியும் சரவணன் தட்டிக் கழித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை ஐஜி-யிடம் பெண் காவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சரவணன் மீது வழக்குத் தொடர்ந்த மேல் குன்னூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதையடுத்து இன்று காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணனை காவல் துறையினர் கைது செய்து வசாரணை மேற்கொண்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com