\
கீரனூரில் சிறப்பு எஸ்.ஐ மரணம் கொலை வழக்காக பதிவு - விசாரிக்க 4 தனிப்படைகள் அமைப்பு

கீரனூரில் சிறப்பு எஸ்.ஐ மரணம் கொலை வழக்காக பதிவு - விசாரிக்க 4 தனிப்படைகள் அமைப்பு

கீரனூரில் சிறப்பு எஸ்.ஐ மரணம் கொலை வழக்காக பதிவு - விசாரிக்க 4 தனிப்படைகள் அமைப்பு
Published on

திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருந்தார். அவரது உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, வழக்கு குறித்து விசாரிக்க கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே பள்ளத்துப்பட்டி என்ற இடத்தில், ஆடு திருடும் கும்பலை பிடிக்க சென்றபோது ஏற்பட்ட மோதலில் திருடர்கள் சிறப்பு உதவி ஆய்வாளரை வெட்டிக் கொலை செய்திருந்தனர். விஷயம் அறிந்து, படுகொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ பூமிநாதனின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து கொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ பூமிநாதனின் வாக்கி டாக்கி மற்றும் செல்போன் ஆகியவை சம்பவ இடத்தில் அருகில் தேங்கியிருந்த நீரில் இருந்தது போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

எஸ்.எஸ்.ஐ. கொலை கீரனூர் காவல் நிலையத்தில் 302 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் டி.எஸ்.பி.கள் சிவசுப்பிரமணியன், அருண்மொழி அரசு தலைமையில் 4 தனிப்படை அமைப்பு.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com