"என்மீதான வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றுங்கள்; தமிழகத்தில் வேண்டாம்” - சிறப்பு டிஜிபி

"என்மீதான வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றுங்கள்; தமிழகத்தில் வேண்டாம்” - சிறப்பு டிஜிபி
"என்மீதான வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றுங்கள்; தமிழகத்தில் வேண்டாம்” - சிறப்பு டிஜிபி

என்மீதான் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றுங்கள் என உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு டிஜிபி கோரிக்கை விடுத்திருக்கிறார். 

மாவட்ட காவல் கண்காணிப்பாளராக உள்ள பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், கடந்த ஏப்ரல் மாதம் அப்போதைய முதலமைச்சரின் பாதுகாப்புப் பணியில் இருந்தார். அவரது மேலதிகாரியான சிறப்பு டிஜிபி அவரது மாவட்டத்துக்கு வந்தபோது, மரியாதை நிமித்தமாக அவரைச் சந்தித்துள்ளார். அப்போது, அந்த பெண் எஸ்.பி.யிடம் சிறப்பு டிஜிபி பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இவ்விவகாரம் குறித்து அந்தப் பெண் ஐபிஎஸ் அதிகாரி அப்போதைய தமிழக டிஜிபி மற்றும் உள்துறைச் செயலாளரிடம் புகார் அளித்தார். இதுகுறித்து, விசாரணை நடத்த கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள பெண் அலுவலர் தலைமையில் விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது. இதையடுத்து முன்னாள் சிறப்பு டிஜிபி, செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி ஆகியோர் மீது 4 பிரிவுகளில் சிபிசிஐடி போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் முன்னாள் சிறப்பு டிஜிபி மீது விழுப்புரம் நீதிமன்றத்தில் 400 பக்க குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி காவல்துறையினர் தாக்கல் செய்தனர். அதனைத் தொடர்ந்து சிறப்பு டிஜிபி இந்த வழக்கு குறித்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது சிறப்பு டிஜிபி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அப்போது ’’காழ்ப்புணர்ச்சியால் போலீஸ் அதிகாரிகள் செயல்படுவதால் வழக்கில் எனக்கு நியாயம் கிடைக்காது; என்மீதான பாலியல் புகார் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றவேண்டும். எனக்கு எதிரான வழக்கின் விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். ஆனால் வழக்கு தமிழகத்தில் வேண்டாம்’’ என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் சிறப்பு டிஜிபியின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com