தனது ஆசைக்காக குடும்பத்தினரை கொலை செய்த பெண்

தனது ஆசைக்காக குடும்பத்தினரை கொலை செய்த பெண்

தனது ஆசைக்காக குடும்பத்தினரை கொலை செய்த பெண்
Published on

கேரளாவில் இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்தினரையே கொலை செய்த சம்பவம் நடைப்பெற்றுள்ளது.

கேரளாவை சேர்ந்தவர் சௌமியா (வயது 28).இவரது பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளின் மர்மச்சாவு காரணமாக காவல்துறையினர் கைது செய்தனர். இவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. செளமியாவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்தனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.  இவரது பெற்றோர் மற்றும் குழந்தைகள் உயிரிழந்துள்ளார். இது இயற்கையான மரணம் அல்ல திட்டமிட்ட நடைப்பெற்ற கொலை சம்பவம் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

தான் சுதந்திரமாக தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு வாழ்வதற்காக இந்தக் கொலை சம்பவத்தை நடத்தியுள்ளார். எலி மருந்தை சிறிய அளவில் உணவில் கலந்து குடும்பத்தினருக்கு அடிக்கடி கொடுத்து வந்துள்ளார். கடந்த 2012ஆம் ஆண்டு இவரது ஒன்றரை வயது மகள் கீர்த்தனா உயிரிழந்துள்ளார். மருத்துவ அறிக்கையில் இது இயற்கையான மரணம் என பதிவாகி இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா(9) இந்தச் சூழ்ச்சிக்கு பலியாகியுள்ளனர்.அடுத்து தாய் கமலா (65).இறுதியாக தந்தை கண்ணன்(76) கொலை செய்துள்ளார். இயற்கை மரணமாக இதனை சித்தரித்து அவர்களின் உடலை அடக்கம் செய்துள்ளார். செளமியாவுக்கு அப்பகுதியில் உள்ள இரு இளைஞர்களுடன் தொடர்பு இருப்பதாக காவல்துறையினர் கூறினர்.

தளச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவரை நான்கு நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதனையடுத்து அவரது வீட்டிற்கு அழைத்து சென்ற போலீஸ் தடயங்களை சேகரித்தனர். செளமியாவுடன் தொடர்புடைய சிலரிடம் நடத்திய விசாரணையில் எந்தத் தகவலும் இல்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com