\
டிவி சேனல் பார்ப்பதில் மோதல் - தந்தையை அடித்துக்கொன்ற மகன்!

டிவி சேனல் பார்ப்பதில் மோதல் - தந்தையை அடித்துக்கொன்ற மகன்!

டிவி சேனல் பார்ப்பதில் மோதல் - தந்தையை அடித்துக்கொன்ற மகன்!
Published on

வேலூரில், ஐபிஎல் போட்டி வைக்காமல், சீரியல் பார்த்த தந்தையை மகன் அடித்து கொலை செய்துள்ளார்.

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த சாய் நகர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை (58). இவரது மகன் நந்தக்குமார் (35). வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த நந்தக்குமார், டிவி பார்க்க உட்கார்ந்துள்ளார். அப்போது தந்தை டிவி சீரியலை பார்த்துக் கொண்டிருந்துள்ளார். சீரியலை மாற்றுக்கோரியும், ஐபிஎல் போட்டியை வைக்க வேண்டும் என்றும் மகன் கூறியுள்ளார்.

இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் மோதலாக மாற, கையில் கிடைத்த திடப்பொருள் ஒன்றை எடுத்து தந்தையின் தலையில் அடித்துள்ளார். தந்தை மயங்கி விழுந்ததும், நந்தக்குமார் அங்கிருந்து ஓடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அண்ணாமலையை, அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், தப்பி ஓடிய மகன் நந்தக்குமாரை தேடிவருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com