தந்தையை கொன்றுவிட்டு நாடகமாடிய மகன் கைது

தந்தையை கொன்றுவிட்டு நாடகமாடிய மகன் கைது

தந்தையை கொன்றுவிட்டு நாடகமாடிய மகன் கைது
Published on

சென்னை எண்ணூரில் தந்தையை கொன்றுவிட்டு மயங்கி விழுந்து இறந்து விட்டதாக நாடகமாடிய மகன் கைது செய்யப்பட்டார்.

சென்னை எண்ணூர் வ.உ.சி.நகரை சேர்ந்தவர் செல்வம். தனியார் நிறுவனம் ஒன்றில் லோடு மேனாக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி தவமணி. இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 28-ஆம் தேதி, செல்வம் மயங்கி விழுந்து விட்டதாக அவரது மகன் வினோத் குமா, அக்கம் பக்கத்தினருக்கு தகவல் அளித்தார். இதனையடுத்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, செல்வம் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்தநிலையில், கணவரது உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக தவமணி எண்ணூர் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் செல்வத்தின் உடற்கூறு ஆய்வறிக்கையில் செல்வம் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் செல்வத்தின் மகன் மீது சந்தேகித்து அவரிடம் விசாரணை செய்ததில், குடி போதையில் தந்தையை அடித்ததும், அப்போது தள்ளி விடப்பட்டதில் அவர் உயிரிழந்தும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சந்தேக மரணத்தை கொலை வழக்காக எண்ணூர் போலீசார் மாற்றி, வினோத் குமாரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வினோத் குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com