சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - 12ம் வகுப்பு மாணவன் கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - 12ம் வகுப்பு மாணவன் கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - 12ம் வகுப்பு மாணவன் கைது
Published on

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த 12ம் வகுப்பு மாணவரை காவல்துறையினர் கைது‌ செய்தனர். 

கண்டமங்கலத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் அதே பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த சிறுமியின் தாயார் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். பின்னர் அந்த மாணவனிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் அவனை கைது செய்து தஞ்சாவூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com