குற்றம்
ஏடிஎம் இயந்திரத்தில் 'ஸ்கிம்மர் கருவி': மோசடி நபர்களின் கைவரிசையா?
ஏடிஎம் இயந்திரத்தில் 'ஸ்கிம்மர் கருவி': மோசடி நபர்களின் கைவரிசையா?
சென்னை மேற்கு மாம்பலத்தில் ஏடிஎம் இயந்திரத்திற்குள் ஸ்கிம்மர் (SKIMMER) கருவி பொருத்தியிருப்பது தெரியவந்துள்ளது.
கோவிந்தன் சாலையில் கனரா வங்கி ஏடிஎம்மில் பணம் நிரப்பச் சென்ற ஊழியர்கள் அதில் ஸ்கிம்மர் (SKIMMER) கருவி பொருத்தப்பட்டிருந்தால் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் குமரன் நகர் காவல்துறையினர் ஸ்கிம்மர் கருவியை அப்புறப்படுத்தினர்.
ஸ்கிம்மர் மூலம் ஏடிஎம் அட்டையின் தகவல்களை படித்து விடலாம். இதன் மூலம் ஏடிஎம் வாடிக்கையாளர்களின் பாஸ் வேர்ட் உள்ளிட்ட தகவல்களைத் திருடி முறைகேடு செய்ய வாய்ப்பு உள்ளது.
எனவே ஸ்கிம்மர் கருவியை வைத்தது யார்? என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே அந்த ஏடிஎம் மையத்தில் இருந்த சிசிடிவி கேமராவும் வேலை செய்யவில்லை. இது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.