\
‌16 வயது சிறுமியை கடத்தி 6 நாட்கள் பாலியல் கொடுமை - 17 வயது சிறுவன் கைது

‌16 வயது சிறுமியை கடத்தி 6 நாட்கள் பாலியல் கொடுமை - 17 வயது சிறுவன் கைது

‌16 வயது சிறுமியை கடத்தி 6 நாட்கள் பாலியல் கொடுமை - 17 வயது சிறுவன் கைது
Published on

கும்பகோணம் அருகே பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை ‌கடத்திச்சென்று ஆறு நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்த 17 வயது சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

கும்பகோணம் அருகே அணைக்கரை பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஒருவர் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். 16 வயதான அந்த மாணவியை கடந்த ஆறு நாட்களாக காணவில்லை என்று சிறுமியின் ‌‌தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதன் அடிப்படையில் பத்துக்கும் மேற்பட்டோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சிறுமி ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்து சிறுமியை மீட்ட போலீசார், அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது, கடந்த 6 நாட்களாக அந்த மாணவி தொடர்ந்து பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, சிறுமி கொடுத்த தகவலின் பேரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய 17 வயது சிறுவனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவுப்படி தஞ்சையில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் அந்த சிறுவனை ஒப்படைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com