தெலங்கானா: தூங்கிக் கொண்டிருந்தபோது காணாமல்போன 6 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

தெலங்கானாவில் பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Mother
Motherpt desk

தெலங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டத்தில் உள்ள சுல்தானாபாத் நகரில் அரிசி ஆலை ஒன்றில் கூலி வேலை செய்து வரும் ஒரு தம்பதியினர் நேற்றிரவு தங்களின் 2 குழந்தைகளுடன் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், நள்ளிரவு எழுந்து பார்த்தபோது அவர்களின் 6 வயது மகளை காணாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், சக தொழிலாளர் உதவியுடன் அந்தப் பகுதி முழுவதும் தேடிப் பார்த்தனர்.

CCTV Footage
CCTV Footagept desk

அப்போது காணாமல்போன சிறுமி, காட்டுப்பகுதியில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார். உடனடியாக அவர்கள் போலீசுக்கு தகவல் அளித்த நிலையில், விரைந்து வந்த போலீசார் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அதே ரைஸ் மில்லில் வேலை செய்யும் பலராம் என்பவர் சிறுமியை தூக்கிச் சென்றது தெரியவந்தது.

Mother
செங்கல்பட்டு: சொத்துப் பிரச்னையால் முற்றிய தகராறு.. பெரியப்பாவை வெட்டிக் கொலை செய்த 21 இளைஞர்!

இதையடுத்து பலராமை கைது செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையின்போது சிறுமியை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை பலராம் ஒப்புக் கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com