கும்பகோணம்: அரசுப் பேருந்தை வழிமறித்து ஓட்டுநர், நடத்துநரை தாக்கியதாக 6 பேர் கைது

கும்பகோணம் அருகே அரசுப் பேருந்தை வழிமறித்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை தாக்கியதாக, கஞ்சா போதையில் இருந்த 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்pt desk

செய்தியாளர்: K.விவேக் ராஜ்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாள், சோழபுரம் பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு நகர பேருந்து கும்பகோணம் நோக்கி வந்துள்ளது. அப்போது பேருந்து, பழைய பாலக்கரை அருகே வந்தபோது கஞ்சா போதையில் இருந்த எட்டு பேர் கொண்ட கும்பல் பேருந்தை மறித்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு ஓட்டுநர் மற்றும் நடத்துநரை பேருந்தில் இருந்து கீழே தள்ளி சரமாரியாக தாக்கியுள்ளனர்.

Video footage
Video footagept desk

இந்த சம்பவத்தை வீடியோ எடுத்த இரு தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்களையும் கடுமையாக அவர்கள் தாக்கியுள்ளனர். இதில், படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இரு தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் ஆகிய நால்வரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கைது செய்யப்பட்டவர்கள்
பறந்துகொண்டிருந்த விமானம் திடீரென தாக்கப்பட்ட சம்பவம்! கீழே விழுந்து எரிந்ததால் பரபரப்பு!

இது தொடர்பாக கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் கஞ்சா போதையில் தகராறில் ஈடுபட்ட பாலக்கரையைச் சேர்ந்த சுதர்சன் (24), ஜனார்த்தனன் (19), உதயகுமார் (25), கார்த்திகேயன் (21), மாரிமுத்து (18) உள்பட ஆறு பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com