\
இளைஞர் கொலை வழக்கு: 3 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்

இளைஞர் கொலை வழக்கு: 3 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்

இளைஞர் கொலை வழக்கு: 3 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்
Published on

காளையார்கோவில் அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மறவமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவர் கடந்த 04.02.2022-ம் தேதி புரசடை உடைப்பு டாஸ்மாக் செல்லும் பாதையில் கொலை செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு, சம்பவத்தில் ஈடுபட்ட அமர்த்தியா பாண்டியன், அருண் குமார் மற்றும் செல்லப்பாண்டி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் முக்கிய குற்றவாளிகளான மறவமங்கலம் அமர்த்தியா பாண்டியன் (17), சிறியூர் செல்லப்பாண்டி (24),மற்றும் மறவமங்கலம் அருண்குமார் (24) ஆகியோரை,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com