\
சிறுமிகள் குறித்து ஆபாச பாடல் பாடியதாக பாடகர் சரவெடி சரண் கைது

சிறுமிகள் குறித்து ஆபாச பாடல் பாடியதாக பாடகர் சரவெடி சரண் கைது

சிறுமிகள் குறித்து ஆபாச பாடல் பாடியதாக பாடகர் சரவெடி சரண் கைது
Published on

யூடியூபில் சிறுமிகள் குறித்து ஆபாசமாக பாடல் பாடிய சரவெடி சரண் என்ற இளைஞரை திருவள்ளூர் சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

யூடியூபில் இளைஞர்கள் இருவர் கானா பாடலொன்றை பாடியுள்ளனர். அதில், பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கு எதிரான கருத்துகள், மிகுந்த வன்மத்துடன் பதிவிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்த கானா பாடல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வீடியோ குறித்து திருவள்ளூர் எஸ்பி வருண்குமார் டிவிட்டரில் குறிப்பிட்டு, அந்த பாடலை பாடியவர்கள் விவரங்களை சேகரித்து வருவதாகவும், இவர்கள் குறித்து பொது மக்கள் தகவல் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். இதனிடையே போக்சோ சட்டத்தின் 16-வது பிரிவை கவனத்தில் கொள்ளும்படியும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில், யூடியூபில் சிறுமிகள் குறித்து ஆபாசமாக பாடல் பாடிய சரவெடி சரண் என்ற இளைஞரை திருவள்ளூர் சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com