குற்றம்
ஷார்ஜா டூ கோவை: விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.3.08 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்
ஷார்ஜா டூ கோவை: விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.3.08 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்
கோவையில் விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூபாய் 1.92 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் ரூபாய் 1.16 கோடி மதிப்பிலான வணிக பொருட்களை கோவை மண்டல மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் பறிமுதல் செய்தனர்.
ஷார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்த பயணிகள் சிலரை சந்தேகத்தின் அடிப்படையில் விமான நிலையத்தில் பணியிலிருந்த கோவை மண்டல மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, 6 பயணிகளிடம் இருந்து ரூபாய் 1.92 கோடி மதிப்பிலான 3985 கிராம் தங்கம் மற்றும் வெளிநாட்டு சிகரெட், ஐ-போன், எலக்ட்ரானிக் பொருட்கள் என ரூ.1.16 கோடி மதிப்பிலான வணிக பொருட்களை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத்தைச் சேர்ந்த 6 பயணிகளையும் டி.ஆர்.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.