\
ஊழியர்கள் கவனத்தை திசை திருப்பி லட்ச ரூபாய் பட்டுப் புடவைகள் திருட்டு

ஊழியர்கள் கவனத்தை திசை திருப்பி லட்ச ரூபாய் பட்டுப் புடவைகள் திருட்டு

ஊழியர்கள் கவனத்தை திசை திருப்பி லட்ச ரூபாய் பட்டுப் புடவைகள் திருட்டு
Published on

சென்னை அசோக்நகரில் உள்ள துணிக்கடை ஒன்றில் ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டுப் புடவைகளை திருடிச் சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை அசோக்நகர் 10ஆவது அவென்யூவில் செயல்பட்டுவரும் துணிக்கடைக்கு, ஒரு சிறுமியுடன் 3 பெண்கள் வந்தனர். அப்போது புடவைகளின் விலை குறித்து ஊழியர்களிடம் அவர்கள் கேட்டறிந்தனர். 

பின்னர், சிறிது நேரத்தில் புடவை வாங்காமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர். இதைத்தொடர்ந்து அங்கிருந்த புடவைகள் சரிபார்க்கப்பட்டபோது, அதில் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டுப் புடவைகள் திருடப்பட்டது தெரியவந்தது. 

இதனால் சிசிடிவி காட்சிகளை கடை நிர்வாகத்தினர் ஆய்வு செய்து பார்த்தனர். இதில் கடைக்கு சிறுமியுடன் வந்த 3 பெண்கள் புடவைகளை திருடிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com