மனவளர்ச்சி குன்றிய மாணவிக்கு பாலியல் வன்கொடுமை – சிசிடிவி காட்சியால் சிக்கிய இளைஞர்

மனவளர்ச்சி குன்றிய மாணவிக்கு பாலியல் வன்கொடுமை – சிசிடிவி காட்சியால் சிக்கிய இளைஞர்

மனவளர்ச்சி குன்றிய மாணவிக்கு பாலியல் வன்கொடுமை – சிசிடிவி காட்சியால் சிக்கிய இளைஞர்
Published on

உடுமலை அருகே மனவளர்ச்சி குன்றிய 17 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள எரிசனம்பட்டியில், மனவளர்ச்சி குன்றிய 17 வயது சிறுமி, பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார் இந்நிலையில், பள்ளி முடிந்து வீட்டிற்குச் செல்ல பேருந்து நிலையத்தில், காத்திருந்தார்.

அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த நபர், மாணவியை வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி தனது இருசக்கர வாகனத்தில், அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, பொள்ளாச்சி செல்லும் சாலை ஓரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, மீண்டும் பேருந்து நிலையத்தில் மாணவியை இறக்கி விட்டுச் சென்றுள்ளார்.

இதையடுத்து வீட்டிற்கு தாமதமாக வந்த மாணவியிடம் அவரது தாய் விசாரித்துள்ளார். அப்போது மாணவி நடந்ததை கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய், உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரை பெற்றுக் கொண்ட மகளிர் காவல் துறையினர், பேருந்து நிலையம் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மாணவியை அழைத்துச் சென்றவர் சின்ன பாப்பனூத்து பகுதியைச் சேர்ந்த கரிச்சிக்குமார் (29) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து போலீசார், போக்சோ வழக்குப்பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com