குற்றம்
பாலியல் புகாரில் சிக்கிய நீதிபதி பணியிடை நீக்கம்
பாலியல் புகாரில் சிக்கிய நீதிபதி பணியிடை நீக்கம்
பாலியல் புகாருக்கு ஆளான பொள்ளாச்சி நீதிமன்ற நீதிபதி பச்சையப்பன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சி நீதிமன்றம் ஜேஎம் 1-ல் நீதிபதியாக பனியாற்றி வருபவர் பச்சையப்பன். இவர் சில தினங்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் இந்திராணி என்பவருக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திராணி கொடுத்த புகாரின் பேரில் கோவை மாவட்ட நீதிமன்றம் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் அரசினர் தங்கும் விடுதியில் நீதிபதி பச்சையப்பனிடம் விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் நீதிபதி பச்சையப்பன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.