திருவல்லிக்கேணி அருகே இளம் பெண்ணை அறையில் வைத்து பூட்டி பாலியல் தொல்லை தந்த மருந்தக உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
சென்னை திருவல்லிக்கேணி அருகே மருந்தகம் நடத்தி வருபவர் முகமது அலி. இவரது கடையில் இளம்பெண் ஒருவரும் பணிபுரிந்து வந்துள்ளார். இதனிடையே தன்னிடம் வேலை பார்க்கும் அந்த இளம்பெண்ணை முகமது அலி அறைக்குள் வைத்து பூட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. உரிமையாளரின் பாலியல் தொல்லையை தாங்க முடியாத அப்பெண் அலறல் சத்தம் போட்டிருக்கிறார்.
உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள், சத்தம் எங்கே இருந்து வருகிறது என தெரியாமல் பதறியிருக்கின்றனர். பின்னர் சத்தம் மருந்தகத்தில் இருந்து வருவதை உணர்ந்த அவர்கள், கதவை உடைத்து அப்பெண்ணை மீட்டனர். பின்னர் மருந்தக உரிமையாளர் முகமது அலியை அடித்து உதைத்த பொதுமக்கள் அவரை ஜாம்பஜார் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.