குற்றம்
திருப்பத்தூர்: மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை- இளைஞர் கைது
திருப்பத்தூர்: மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை- இளைஞர் கைது
திருப்பத்தூர் அருகே மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் அடுத்த ஆரிப்கான் நகர் பகுதியை சேர்ந்த ராகுல் என்பவர் நேற்று நள்ளிரவில் அதே பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவரின் வீட்டின் உள்ளே நுழைந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் கூடி ராகுலை வீட்டுக்குள் பூட்டி வைத்தனர். பின்னர் காவல் துறைக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் ராகுலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.