சென்னை: பள்ளிக்குச் செல்லாமல் அடம்பிடித்த 5 வயது சிறுமி: வெளியான அதிர்ச்சி தகவல்

சென்னை: பள்ளிக்குச் செல்லாமல் அடம்பிடித்த 5 வயது சிறுமி: வெளியான அதிர்ச்சி தகவல்

சென்னை: பள்ளிக்குச் செல்லாமல் அடம்பிடித்த 5 வயது சிறுமி: வெளியான அதிர்ச்சி தகவல்
Published on

5 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் குமார் (38) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது ஐந்து வயது மகள் பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 29-ஆம் தேதியிலிருந்து சிறுமி பள்ளிக்கு செல்லாமல் அடம் பிடித்து வந்துள்ளார். நேற்று பெற்றோர் பள்ளிக்கு செல்ல வற்புறுத்தியுள்ளனர். ஆனால், அந்த சிறுமி பள்ளிக்கு செல்ல பயந்து அழுதுள்ளார்.

இதையடுத்து சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தபோது, தான் வகுப்பறையில் இருந்து மாடிப்படியில் கீழே இறங்கி வரும்போது, பள்ளியில் பியூனாக பணிபுரியும் ராஜ் (38), என்பவர் தன்னை சில இடங்களில் தொட்டு பேசுவதாக சொல்லி அழுதுள்ளார்.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ராஜிடம் விசாரித்து வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com