மாணவர்களுக்கு பாலியல் தொல்லை: வீடியோ எடுத்து மிரட்டியதாக ஆசிரியை உட்பட இருவர் கைது

மாணவர்களுக்கு பாலியல் தொல்லை: வீடியோ எடுத்து மிரட்டியதாக ஆசிரியை உட்பட இருவர் கைது

மாணவர்களுக்கு பாலியல் தொல்லை: வீடியோ எடுத்து மிரட்டியதாக ஆசிரியை உட்பட இருவர் கைது
Published on

மதுரையில் மாணவர்களை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுத்தி வீடியோ பதிவு செய்து மிரட்டியதாக பள்ளி ஆசிரியை உட்பட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை மாநகரில் வசிக்ககூடிய 45வயது மதிக்கத்தக்க பள்ளி ஆசிரியை ஒருவர் கணவரை பிரிந்து தனது மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2010-ஆம் ஆண்டு மதுரை திருப்பரங்குன்றம் பாலாஜிநகர் பகுதியைச் சேர்ந்த வீரமணி என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அடிக்கடி இருவரும் தனிமையில் இருந்துவந்த நிலையில், கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆசிரியை மற்றும் வீரமணி ஆகிய இருவரும் இணையதளத்தின் மூலம் ஆபாச வீடியோக்களை பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து ஆபாச வீடியோக்களில் இருப்பது போன்று தவறான உறவினை மேற்கொள்ள ஆசைப்பட்டு தன்னிடம் டியூசன் பயில வந்த இரு மாணவர்களிடமும் சேர்ந்து இருக்க நினைத்துள்ளனர். இதையடுத்து மாணவர்களுடன் ஆபாசமாக இருப்பதை போன்று புகைப்படத்தை காட்டி மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுத்தி அதை வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் வீரமணி தனது நண்பர் ஒருவருக்கு வீடியோவை காட்டியுள்ளார். அப்போது அதில் இருந்த மாணவர்களை தொடர்பு கொண்டு வீரமணியின் நண்பர் வீடியோ குறித்து கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் வீரமணியிடம் ஏன் வீடியோவை வெளியிட்டீர்கள் என கேட்டபோது இதை வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் அச்சமடைந்த மாணவர்கள் கரிமேடு காவல் நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து வீரமணியை கைது செய்து விசாரணை நடத்தி செல்போனை ஆய்வு செய்ததில் வீடியோ அனைத்தும் இருந்துள்ளது. இதனையடுத்து புகார் உண்மை என்பது தெரியவந்த நிலையில், வீரமணி மற்றும் ஆசிரியை மீது மதுரை மாநகர தெற்கு மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு வீரமணி மற்றும் ஆசிரியை கைது செய்தனர்.

பள்ளி ஆசிரியை தனது ஆண் நண்பருடன் சேர்ந்து தனது மகனையும் மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட கொடூரமும் அரங்கேறியுள்ளது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com