செல்போனில் ஆபாச படங்களைக் காட்டி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமையாசிரியர் கைது

செல்போனில் ஆபாச படங்களைக் காட்டி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமையாசிரியர் கைது

செல்போனில் ஆபாச படங்களைக் காட்டி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமையாசிரியர் கைது
Published on

கோவில்பட்டி அருகே செல்போனில் ஆபாச படங்களைக் காட்டி பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தலைமையாசிரியர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இளையரசனேந்தல் பகுதியில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. 5ஆம் வகுப்பு வரை செயல்படும் இந்த பள்ளியில் சாத்தூர் அருகே உள்ள சின்னகொல்லப்பட்டி கிராமம் வசந்த நகரைச் சேர்ந்த தாமஸ் சாமுவேல் (57) என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், இவர் அங்கு படிக்கும் மாணவிகளுக்கு செல்போனில் ஆபாச படங்ளை காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஒரு மாணவியின் தாயார் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் பள்ளிக்கு நேரடியாக சென்ற இன்ஸ்பெக்டர் பத்மாவதி விசாரணை நடத்தினார்.

விசாரணையில் தலைமையாசிரியர் தாமஸ் சாமுவேல், 9 குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் கோவில்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com