குற்றம்
பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை: விவசாய கூலித் தொழிலாளி போக்சோவில் கைது
பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை: விவசாய கூலித் தொழிலாளி போக்சோவில் கைது
ஈரோட்டில் நான்கு வயது பெண் குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்த விவசாய கூலித் தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே வசிப்பவர் செல்வம் (51) விவசாய கூலித் தொழிலாளியான இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடிபோதையில் அவரது வீட்டின் அருகே உள்ள நான்கு வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கெலாடுத்துள்ளார்.
இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்த போலீசார், செல்வத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.