\
மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தைக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணை - நீதிமன்றம் தீர்ப்பு

மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தைக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணை - நீதிமன்றம் தீர்ப்பு

மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தைக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணை - நீதிமன்றம் தீர்ப்பு
Published on

பெற்ற மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தைக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (44) என்பவர் அவரது 7 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அவரது மனைவி கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் நிரூபணமானதையடுத்து மாரிமுத்துவுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா தீர்ப்பு வழங்கினார்.

புகார் அளிக்கப்பட்டு எட்டு மாத காலத்தில் குற்றவாளிக்கு தண்டனை வழங்கப பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குற்றவாளி மாரிமுத்து திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com