அரசு பேருந்தில் மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை: ஓட்டுநர் கைது

அரசு பேருந்தில் மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை: ஓட்டுநர் கைது

அரசு பேருந்தில் மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை: ஓட்டுநர் கைது
Published on

அரசு பேருந்தில் தஞ்சாவூரில் இருந்து வேலூருக்கு பயணித்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று வருகிறார். இவருக்கு விடுமுறை என்பதால் சொந்த ஊருக்குச் செல்வதற்காக நேற்று கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து திருப்பதி நோக்கிச் செல்லும் தமிழக அரசு விரைவுப் பேருந்தில் வேலூர் நோக்கி பயணம் செய்துள்ளார்.

அப்போது மாணவி உறங்கும் நேரம் பார்த்து அதே பேருந்தில் வந்த மாற்று ஓட்டுனராக பணியாற்றும் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டாத்தைச் சேர்ந்த நீலமேகம் (46) என்பவர் மாணவியின் அருகில் அமர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி வேலூர் வந்ததும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் அரசு பேருந்து ஓட்டுனர் நீலமேகத்தை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com