போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றுவந்த சிறுவனுக்கு இப்படியொரு கொடுமையா?!

போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றுவந்த சிறுவனுக்கு இப்படியொரு கொடுமையா?!
போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றுவந்த சிறுவனுக்கு இப்படியொரு கொடுமையா?!

மாங்காடு அருகே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த மன நலம் பாதிக்கப்பட்ட சிறுவனை ஓரின சேர்க்கைக்கு அழைத்து துன்புறுத்தியதாக உரிமையாளர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை மாங்காடு அடுத்த பரணிபுத்தூர் பகுதியில் ரவிக்குமார் என்பவருக்குச் சொந்தமான மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு குடிப்பழக்கம் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் ஐயப்பந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டு பெற்றோரின் பேச்சை கேட்காமல் இருந்து வந்ததாகக் கூறி அவரது பெற்றோர் சிறுவனை இங்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

இந்த நிலையில் இந்த போதை மறுவாழ்வு மையத்திலிருந்து தப்பிய சிறுவன் குழந்தைகள் நல குழுமத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தன்னை மறுவாழ்வு மையத்தில் துன்புறுத்தி அடிப்பதாகவும், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தி காயங்கள் ஏற்படுத்தியதாகவும் மேலும் ஓரின சேர்க்கையில் தன்னை துன்புறுத்தியதாகவும் தெரிவித்தார். அதேபோல் கரண்ட் ஷாக் வைத்ததோடு குண்டூசியால் மார்பில் குத்தியும், சிகரெட் நெருப்பால் சூடு வைத்தும் சித்திரவதை செய்துள்ளனர் என்றும் அதிர்ச்சியான தகவலை தெரிவித்தார்.

இது குறித்து தகவல் அறிந்த போரூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து அந்த மையத்தின் உரிமையாளர் ரவிக்குமார் (40), உதவியாளர் கார்த்திக் (29), எல்க்ட்ரிஷன் ஜெகன் மற்றும் மோகன் ஆகிய நான்கு பேரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவனை அங்கிருந்தவர்கள் அடித்து துன்புறுத்தி பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து நான்கு பேரை கைது செய்த போலீசார், மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த மேலும் சிலர் தப்பிச் சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து மறுவாழ்வு மையத்தில் இருந்தவர்கள் வேறு மையத்திற்கு மாற்றப்பட்டு மறுவாழ்வு மையமும் பூட்டப்பட்டது. அதேபோல் மறுவாழ்வு மையத்தின் இன்சார்ஜ் நாவலனை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட நால்வரையும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com