\
ஓடும் ரயிலில் இளம் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்

ஓடும் ரயிலில் இளம் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்

ஓடும் ரயிலில் இளம் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்
Published on

சென்னையில் பறக்கும் ரயிலில் இளம்பெண் ஒருவரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நபரை எழும்பூர் ரயில்வே காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னையில்  நேற்று இரவு வேளச்சேரியில் இருந்து பார்க் டவுன் ரயில் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த பறக்கும் ரயிலில் இளம்பெண் ஒருவர் பயணம் செய்தார். அப்போது வேளச்சேரியைச் சேர்ந்த சத்யராஜ் என்பவர் சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில் ஏறியுள்ளார். தனியாக இருந்த‌ பெண்ணிடம் சத்யராஜ் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். அந்தப் பெண்ணின் அலறல் சத்தம் கேட்ட நிலையில் அதே ரயிலில் பயணம் செய்த ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் சிவாஜி என்பவர் பெண்ணை காப்பாற்றியுள்ளார். மயங்கிய நிலையில் இருந்த பெண் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட‌ சத்யராஜை எழும்பூர் ரயில்வே காவல்துறையினர் கைது செய்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com