\
3 வயது குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்: ஊசிகளால் குத்தி சித்ரவதை

3 வயது குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்: ஊசிகளால் குத்தி சித்ரவதை

3 வயது குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்: ஊசிகளால் குத்தி சித்ரவதை
Published on

மேற்குவங்க மாநிலம் புரூலியாவில் 3 வயது குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தலோடு ஊசிகளால் குத்தி சித்ரவதை செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேற்குவங்க மாநிலம், புருலியா பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் 3 வயதுக் குழந்தை உடலில் அக்குபஞ்சர் முறையில் ஊசிகள் குத்தப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. மருத்துவர்கள் பரிசோதித்த போது ஒவ்வொரு ஊசியும் 4 இஞ்ச் வரை இருந்திருக்கிறது. கல்லீரலில் 3 ஊசிகளும், வயிற்றின் உட்புறப் பகுதியில் 4 ஊசிகளும் இருந்திருக்கின்றன. இதனையடுத்து கிட்டத்தட்ட 2 மணி நேரம் வரை அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் குழந்தையின் உடலில் இருந்த 7 ஊசிகளையும் அகற்றியிருக்கின்றனர். 
குழந்தை தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவிக்கும் மருத்துவர்கள், குழந்தையை யாரோ பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளனர். இது குறித்த விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள போலீசார் குழந்தையைச் சித்ரவதை செய்த நபரைத் தேடி வருகின்றனர். குழந்தையின் தாயார் வேலை செய்த வீட்டின் உரிமையாளர்தான் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாகவும் சந்தேகம் எழுந்துள்ளதால் அது குறித்தும் விசாரித்து வருகின்றனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com