உடுமலை அருகே 16 வயது சிறுமிக்கு திருமண ஆசைகாட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற வினோத் (27) என்பவர் திருமண ஆசைகாட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் சிறுமியின் தாய்க்கு தெரியவர அவர், உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணிகண்டனிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரனையில் சிறுமிக்கு திருமண ஆசைகாட்டி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போக்சோவில் கைது செய்த போலீசார், நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்..