மதுரை: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

மதுரை: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

மதுரை: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
Published on

மேலூர் அருகே தொடர் பாலியல் தொந்தரவில் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டியைச் சேர்ந்தவர் பழனியப்பன் - சபரி தம்பதியினர். இவர்களுக்கு 18 வயதில் ஒரு பெண் குழந்தையும், 1 ஆண் குழந்தையும் உள்ள நிலையில், இவர்களது பெண் குழந்தை மேலூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார்.

இந்நிலையில், இதே ஊரைச் சேர்ந்த சுல்தான் என்பவரின் மகன் நாகூர்அனிபா (26) என்பவருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு நாகூர் அனிபா மாணவியை கடத்திச் சென்று தொடர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மாணவியின் தாய் சபரி அளித்த புகாரின் பேரில், மேலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள நாகூர் அனிபாவை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், பாலியல் தொந்தரவு காரணமாக பாதிக்கப்பட்ட மாணவி மிகவும் ஆபத்தான நிலையில் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com