தக்காளி பெட்டிகளுக்கு இடையே கடத்திவரப்பட்ட 1,920 மது பாட்டில்கள் பறிமுதல்

தக்காளி பெட்டிகளுக்கு இடையே கடத்திவரப்பட்ட 1,920 மது பாட்டில்கள் பறிமுதல்
தக்காளி பெட்டிகளுக்கு இடையே கடத்திவரப்பட்ட 1,920 மது பாட்டில்கள் பறிமுதல்

வேன்களில் கடத்திவரப்பட்ட ரூ. 4 லட்சம் மதிப்பிலான 1,920 கர்நாடக மதுபான பாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 வேன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் தற்போது கொரோனா நோய் பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகரில் கள்ளச்சந்தையில் கர்நாடக மாநில மதுபாட்டில்களை விற்பனை செய்வதாக ஆற்காடு காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் நேற்று இரவு பைபாஸ் சாலையில் ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அத்தியாவசிய பொருட்களான தக்காளியை கொண்டு வந்த வேனை மடக்கி சோதனை செய்தனர். அப்போது தக்காளி பெட்டிகளுக்கு இடையே மறைத்து மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து வந்த மூன்று வேன்களை சோதனை செய்தனர்.

அதில், மொத்தமாக கடத்தி வரப்பட்ட ரூ. 4 லட்சம் மதிப்பிலான 1920 மதுபான பாட்டீல்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து வேனின் உரிமையாளர் தாஜ்புரா பகுதியை சேர்ந்த பாலாஜி மற்றும் ஓட்டுநர் விஜய், ஆற்காடு கொல்லபாளையம் பகுதியை சேர்ந்த சங்கர் ஆகியோரை ஆற்காடு நகர காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com