சென்னை வங்கியில் நகைக்கொள்ளை நடந்தது எப்படி? காவலாளி கொடுத்த பகீர் தகவல்

சென்னை வங்கியில் நகைக்கொள்ளை நடந்தது எப்படி? காவலாளி கொடுத்த பகீர் தகவல்
சென்னை வங்கியில் நகைக்கொள்ளை நடந்தது எப்படி? காவலாளி கொடுத்த பகீர் தகவல்

ஃபெடரல் வங்கியின் தங்க நகைக்கடன் பிரிவில் கொள்ளை நடந்தது குறித்து காவலாளி ஒருவர் தகவல் அளித்துள்ளார்.

"மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை எனக்கு கொடுத்து கொள்ளையில் ஈடுபட்டனர்" என்று அங்கு பணிபுரியும் காவலாளி சரவணன் கொடுத்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து வெளியாகியுள்ள வீடியோவில், ‘’என்னிடம் கூல்ட்ரிங்க்ஸ் வாங்கி வரச் சொன்னார். நான் வாங்கி வந்து கொடுத்தபோது, ’வெயிட்பண்ணு, வெயிட் பண்ணு’ என்று கூறினார். மறுபடியும் என்னை கூல்ட்ரிங்க்ஸ் எடுத்துக்கொண்டு வரச்சொன்னார். வந்ததும் அதை என்னையே சாப்பிடச் சொன்னார்.

’எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது; நான் சாப்பிடல’ என்று சொன்னேன். ’இல்ல சாப்பிடு; நல்லாத்தான் இருக்கும்’ என்று சொன்னார். கொஞ்சம் குடித்துவிட்டு ஒருமாதிரியாக இருக்கிறது என்று கொஞ்சம் கீழே ஊற்றிவிட்டேன். கொஞ்சம் தலைசுற்றலாக இருந்ததால் சாப்பாடு சாப்பிட்டேன். எனக்கு ஜூஸ் கொடுத்ததில் ஒருவர் இங்கு வேலை செய்பவர். நான் இங்கு இரண்டரை வருடமாக வேலை செய்கிறேன். இதுபோல் இதற்கு முன்பு நடந்ததில்லை’’ என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com