\
கணவனை கொன்று புதைத்த 2-வது மனைவி

கணவனை கொன்று புதைத்த 2-வது மனைவி

கணவனை கொன்று புதைத்த 2-வது மனைவி
Published on: 

தருமபுரியில் பைனான்சியர் ஒருவர் அவரது இர‌ண்டாவது மனைவியால் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தருமபுரி, காமாட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கவியரசு என்பவர் அதே பகுதியில் பைனான்ஸ் நடத்தி வந்தார். அவருக்கும் நிர்மலா என்பவருக்கும் கடந்த இரண்டு மாதத்திற்கு ‌முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் கவியரசு திடீரென காணாமல் போனார்.

கவியரசு மாயமானது குறித்து அவரது முதல் மனைவி மற்றும் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கவியரசுவை அவரது இரண்டாவது மனைவி நிர்மலா தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. மேலும், கொன்று புதைக்கப்பட்டிருந்த கவியரசு உடலை காவல்துறையினர் தோண்டி எடுத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com