சீர்காழி: முதல் கணவரின் பென்ஷன் தொகையை பெற இரண்டாவது கணவர், மாமியாரை கொல்ல முயற்சி

சீர்காழி: முதல் கணவரின் பென்ஷன் தொகையை பெற இரண்டாவது கணவர், மாமியாரை கொல்ல முயற்சி
சீர்காழி: முதல் கணவரின் பென்ஷன் தொகையை பெற இரண்டாவது கணவர், மாமியாரை கொல்ல முயற்சி

சீர்காழி அருகே முதல் கணவரின் பென்ஷன் தொகையை பெற தடையாக இருந்த 2வது கணவன், மாமியாரை கொலை செய்ய முயன்ற மனைவி மற்றும் உறவினர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா மேலச்சாலை கிராமத்தைச் சேர்ந்தவர் பால் வியாபாரி மில்லர் (47). இந்நிலையில், இவரது முதல் மனைவி இவரை விட்டு பிரிந்து சென்றதால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவனை இழந்த சேண்டிருப்பு கிராமத்தைச் சேர்ந்த அம்பிகா (38) என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில், இவர்களுக்கு கடந்த ஏழு மாதத்திற்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் அம்பிகாவின் முதல் கணவர் ஜெயகண்ணன் தலைமை ஆசிரியராக பணியாற்றி உயிரிழந்ததால் அவரது செட்டில்மெண்ட் மற்றும் பென்ஷன் தொகை அம்பிகா பெயருக்கு வந்துள்ளது. இது குறித்து கேட்ட மில்லர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு செட்டில்மெண்ட் தொகை மற்றும் பென்ஷன் தொகையை வாங்குவது சட்டத்திற்கு புறம்பானது என எச்சரித்துள்ளார்.

இதனால் மில்லர் - அம்பிகா இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மில்லரை பிரிந்து சென்ற அம்பிகா தனது உறவினர்களுடன் மேலச்சாலை மில்லர் வீட்டிற்கு வந்து வீட்டின் கதவுகளை உடைத்து மில்லரை அரிவாளால் வெட்டியதுடன், அவரின் தாயார் சகுந்தலாவை கடுமையாக தாக்கி விட்டு தப்பி ஓடியுள்ளனர். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து படுகாயம் அடைந்த மில்லர் மற்றும் அவரது தாயார் சகுந்தலா ஆகிய இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த வைத்தீஸ்வரன் கோவில் போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து மனைவி அம்பிகா, அக்கா லட்சுமி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்த வைத்தீஸ்வரன் கோவில் போலீசார், விசாரணை மேற்கொண்டுவருகிறனர்.

முதல் கணவரின் செட்டில்மெண்ட் தொகை மற்றும் பென்ஷன் தொகைக்கு ஆசைப்பட்டு 2வது கணவர் மற்றும் மாமியாரை கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com