\
கடைக்காரருக்கு கத்திக்குத்து; காவலருக்கு மிரட்டல்: பிரபல ரவுடிக்கு போலீசார் வலைவீச்சு

கடைக்காரருக்கு கத்திக்குத்து; காவலருக்கு மிரட்டல்: பிரபல ரவுடிக்கு போலீசார் வலைவீச்சு

கடைக்காரருக்கு கத்திக்குத்து; காவலருக்கு மிரட்டல்: பிரபல ரவுடிக்கு போலீசார் வலைவீச்சு
Published on

சென்னையில் ரவுடி ஒருவர் கடைக்குள் புகுந்து கடை மேலாளரை பட்டாக்கத்தியால் வெட்டிவிட்டு பணத்தை எடுத்துச் செல்வதுடன் காவலர் ஒருவரை சாலையில் மிரட்டிவிட்டுச் சென்றுள்ளார். இந்நிகழ்வுகளின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 

கடந்த 21ஆம் தேதி இரவு வீரபத்திரன் என்ற காவலர் பைக்கில் செல்லும்போது அவரை இருவர் வழிமறித்து வாக்குவாதம் செய்ததுடன் கொலைசெய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

இது தொடர்பாக வீரபத்திரன் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் காவலரை மிரட்டியது பிரதீப் என்ற பிரபல ரவுடி என்பதும் அவர் மீது 30 வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து பிரதீப்பின் கூட்டாளிகளை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் 21ஆம் தேதி இரவு சிந்தாதரிப்பேட்டையில் முட்டைக்கடைக்குள் புகுந்து அங்கிருந்த கடை மேலாளரை கத்தியால் குத்திவிட்டு பிரதீப் பணத்துடன் தப்பி ஓடியதும் வரும் வழியில் காவலர் வீரபத்திரனை மிரட்டியதும் தெரியவந்தது. இந்நிலையில் ரவுடி பிரதீப்பை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com