\
வீட்டின் அருகே உடலில் காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பள்ளி மாணவி

வீட்டின் அருகே உடலில் காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பள்ளி மாணவி

வீட்டின் அருகே உடலில் காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பள்ளி மாணவி
Published on

திருவாரூர் அருகே வீட்டின் பின்புறம் உள்ள வயல்வெளியில் பள்ளி மாணவி ஒருவர் உடலில் காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மகிழஞ்சேரியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் மௌனிகா(17). இவர் வீட்டின் பின்புறம் உள்ள வயல்வெளியில் உடலில் காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார்.

இன்று காலை வயலுக்குச் சென்ற கிராம மக்கள் மௌனிகாவின் சடலத்தை பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com