பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை – ஆட்டோ ஓட்டுனர் போக்சோவில் கைது

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை – ஆட்டோ ஓட்டுனர் போக்சோவில் கைது

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை – ஆட்டோ ஓட்டுனர் போக்சோவில் கைது
Published on

பட்டாபிராமில் பள்ளி மாணவியை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுனர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராமைச் சேர்ந்த சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் கடத்த சில நாட்களாக பள்ளிக்குச் செல்ல விரும்பாமல் மன உளைச்சலில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக வழக்கம் போல் வீட்டிற்கு வந்த மாணவி வீட்டில் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

அப்போது அந்த வழியே வந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக தனது ஆட்டோவில் தூக்கிச் சென்று பூந்தமல்லி வெள்ளவேடு அருகே ஒரு வாட்டர் கம்பெனி பின்புறமுள்ள முட்புதரில் வைத்து கட்டாயபடுத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி அவரிடமிருந்து அலறியபடி தப்பித்து ஒடிவந்துள்ளர்.

இதனை கண்ட அவ்வழியே சென்ற பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், மாணவியை மீட்டு அருகிலிருந்த வெள்ளவேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட மாணவி நடந்தவற்றை போலீசாரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் வெள்ளவேடு காவல்துறையினர் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பட்டாபிராம் டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராமகிருஷ்ணன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து அவர் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். முன்னதாக ஆவடி மகளிர் காவல்துறையினர் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளியான ஆட்டோ ஓட்டுனரை மேலிட உத்தரவின்படி சிறைக்கு அனுப்பி வைத்ததுள்ளனர்.

இந்நிலையில், ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதியில் போக்சோ வழக்குப் பதியாத நாட்களே இல்லை எனவும் சிறுமிகளிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாததால் சிறுமியர்கள் மீதான பாலியல் சீண்டல் அதிகரித்து போக்சோ வழக்குகள் அதிகரிப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com