குற்றம்
ஆசை வார்த்தை கூறி 7ம் வகுப்பு மாணவி மும்பைக்கு கடத்தல்
ஆசை வார்த்தை கூறி 7ம் வகுப்பு மாணவி மும்பைக்கு கடத்தல்
காட்பாடியில் 7ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி மும்பைக்கு கடத்த முயன்ற பெண் கைது செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி இளங்கோ தெருவைச் சேர்ந்தவர் துளசி (12). இவர் காட்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி துளசியை பக்கத்து வீட்டில் இருக்கும் பிரியா ஆசை வார்த்தை கூறி ரயிலில் மும்பை அழைத்து சென்றுள்ளார். இதை சுதாரித்துக் கொண்ட மாணவி துளசி மந்தராலயாவில் இறங்கி ரயில்வே போலீசிடம் தகவல் கொடுத்துள்ளார்.
பின்னர் இதுகுறித்த தகவல் காட்பாடி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. காட்பாடி போலீசார் அங்கிருந்து துளசியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மாணவி துளசியை மும்பைக்கு கடத்திய பிரியாவை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.