பிரதம மந்திரி காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் மோசடி – 2 பெண்கள் உட்பட 4 பேரிடம் விசாரணை

பிரதம மந்திரி காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் மோசடி – 2 பெண்கள் உட்பட 4 பேரிடம் விசாரணை
பிரதம மந்திரி காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் மோசடி – 2 பெண்கள் உட்பட 4 பேரிடம் விசாரணை

பிரதம மந்திரி காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் தலா 100 ரூபாய் வசூல் செய்த நபர்களை கிராம மக்கள் காவல்துறையிடம் ஒப்படைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள காமாட்சிபுரம் பகுதியில் மத்திய அரசின் பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம் என்ற பெயரில் இலவச சிகிச்சை பெற காப்பீடு அட்டை வழங்குவதாகக் கூறி தலா ரூ.100 வீதம், இரண்டு இளைஞர்கள் மற்றும் இரண்டு இளம் பெண்கள் கிராம மக்களிடம் வசூல் செய்துள்ளனர்.

இவர்களின் செயலால் சந்தேகமடைந்த கிராம மக்கள் இதுகுறித்து ஊராட்சி தலைவரிடம் கூறியுள்ளனர். ஊராட்சி தலைவர் ஆவணங்களை சரிபார்த்த போது போலியாக ஆவணங்கள் தயாரித்து முறைகேடாக பொதுமக்களிடம் பணம் வசூல் செய்தது தெரியவந்தது. இதையடுத்து பண வசூலில் ஈடுபட்ட நால்வரையும் நாகமலைபுதுக்கோட்டை போலீசில் ஒப்படைத்து உரிய விசாரணை நடத்தக் கோரினர்.

இதைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம் என்ற பெயரில் கிராமங்களுக்குச் சென்று ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை பெற அணுகக்கோரி ஏமாற்றியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து தொடர்ந்து 4 பேரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com